CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சிகப்பு பந்தில்தான் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும்: பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். பிங்க்-கால் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் இவர்தான்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, டெஸ்ட் போட்டிகள் பிங்க்-பாலில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் பேட் கம்மின்ஸ் சிகப்பு பந்துகளை பயன்படுத்த வேண்டும். இதுதான் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமமான அளவு போட்டியை கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘நான் இன்னும் டெஸ்ட் போட்டியில் சிகப்பு பந்தை பயன்படுத்துவதை விரும்புகிறேன். பிங்க்-பாலில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடத்துவது சிறப்பாக இருக்கும்’’ என்றார்.