கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் டோனி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
போட்டிக்கு பின் பேசிய சிஎஸ்கே அணித்தலைவர் டோனி, பொதுவாக நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், பந்துவீச்சாளர்களின் முயற்சியை பேட்ஸ்மேன்கள் பாழாக்கி விட்டார்கள்.
வீரர்கள் மாறி மாறி பேட்டிங் செய்திருக்க வேண்டியது முக்கியம், ஆனால் கடைசி சில ஓவர்களில் நாங்கள் எந்த பவுண்டரியும் அடிக்கவில்லை.
இறுதி ஓவர்களில் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து லெந்த பந்து வீசினர், எனவே நாங்கள் புதுமையாக விளையாடி இருக்க வேண்டும்.
இறுதியில் தான் நாங்கள் நிலைமைக்கு ஏற்ப சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அவ்வாறு விளையாடவில்லை என டோனி கூறினார்.
சிஎஸ்கே பேட்டிங்கின்போது நடு ஓவர்களில் அவர்கள் இரண்டு மூன்று ஓவர்களை அருமையாக வீசினார்கள். பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம். அந்தச் சமயத்தில் நாங்கள் சரியாக விளையாடியிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும் என டோனி கூறினார்.