TAMIL
சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக புகார்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள், பந்தின் மீது எச்சில் தேய்க்க ஐசிசி தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற கவுண்டி போட்டியின் போது சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்ச் கிளைடன்,
பந்தில் கைககளை கழுவ பயன்படுத்தப்படும் கிருமி நாசினியை (சானிடைசர்) பந்தின் மீது தேய்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவரை இடைநீக்கம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருகிறது. இதனால், அடுத்த மாதம் சர்ரே அணிக்கு எதிராக நடைபெறும் பாப்வில்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார் என்று சஸ்ஸெக்ஸ் அணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.