TAMIL

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி அறிமுகம் ஆகி 15 ஆண்டுகள் நிறைவு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி.

கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கங்குலி தலைமையிலான அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக டோனி அறிமுகம் ஆனார்.


துவக்க போட்டியில் ரன் எதுவும் இன்றி டோனி ஆட்டமிழந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடி பேட்டிங்கால், ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டார்.

டோனி தலைமையின் கீழ் இந்திய அணி இரண்டு உலக கோப்பைகளை (டி 20 , ஒருநாள்) வென்றுள்ளது.

இந்தியாவின் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் சிறந்த கேப்டனாகவும் விளங்கிய டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியுள்ளன.


அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 17,266 ரன்கள் குவித்துள்ள டோனி 350 ஒருநாள் போட்டிகளிலும் 90 டெஸ்ட் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்தஒரு போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் உள்ள டோனி, கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆகி 15 ஆண்டுகள் ஆனதையடுத்து, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டோனியின் சிறந்த இன்னிங்ஸ்களை பதிவு செய்து அவருக்கு பாராட்டுக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker