TAMIL

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய சாதனையை செய்த தமிழகத்தை சேர்ந்த வீரர்! கவனிக்கப்படவில்லையே என ஆதங்கம்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் 2019 ஆண்டில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் கிரிக்கெட் துறையில் பெரும் சாதனை நிகழ்த்தியவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது.



இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருட சாதனையை மட்டுமல்லாமல் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.

சர்வதேச போட்டிகளில் 2011 முதல் இவர் வீழ்த்திய விக்கெட்டுகள் மொத்தம் 564.

அவரது இந்த சாதனையை பாராட்டி ஐசிசி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், ஸ்டூவர் ப்ராட் 525 விக்கட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.



ஆனால் அஸ்வின் இவ்வளவு பெரிய சாதனையை செய்தும் அதற்கு பெரியளவில் பாராட்டுகளும், அங்கிகாரமும் கிடைக்கவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டார்கள்.

இதே கருத்தை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரங் கங்குலியும் தெரிவித்துள்ளார்.

கங்குலியின் டுவிட்டர் பதிவில், அஸ்வின் தான் இந்த தசாப்தத்தில் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

என்னவொரு அருமையான முயற்சி! இது போன்ற சாதனைகளை சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போவதாக ஒரு உணர்வு என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker