TAMIL
சமூக இடைவெளியை மீறி கமெராவுக்காக கைதட்டிய பிரித்தானியர்கள்..! கொந்தளித்த பென் ஸ்டோக்ஸ்
பிரித்தானியாவில் நேற்றிரவு லண்டன் மருத்துவமனைக்கு வெளியே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜில் சுகாதார ஊழியர்களைப் பாராட்ட வந்தபோது, இரண்டு மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறியதற்காக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மக்களை சாடியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ காட்சிகள், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் என்ஹெச்எஸ் ஊழியர்களை
பாராட்டும் வகையில் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அருகே இரவு 8 மணிக்கு இடம்பெற்ற கைதட்டல் நிகழ்வில் பெரிய கூட்டம் கூடியிருப்பதைக் காட்டுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தனது கோபத்தை ட்விட்டர் வாயிலபாக வெளிப்படுத்தியுள்ளார்.
என்ஹெச்எஸ்-ஐப பாராட்டும் போது மக்கள் கமெராவில் தெரிவதற்காக மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்துவதாகக் கூறினார்.
இன்றிரவு பாலத்திற்குச் சென்று, என்ஹெச்எஸ்-க்கு ஆதரவைக் காண்பிப்பதற்காக மற்றவர்களுடன் நிறைய கைதட்டலாம், கமெராவில்
நாம் தெரியும் வரை மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தினாலும் பரவாயில்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ஸ்டோக்ஸ் ட்வீட் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“Let go to the bridge tonight and clap with loads of other people to show our support for the NHS,it’s fine if we put other people at risk as long as we get seen on camera clapping I’m cool with it” SERIOUSLY 😡😡 https://t.co/f71FRv33YG
— Ben Stokes (@benstokes38) April 17, 2020