CRICKETLATEST UPDATESNEWSTAMIL

சச்சின் மகன் ஓவரில் 21 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ்: 47 பந்தில் 120 ரன்கள்

இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை உத்தேச அணியில் சூர்யகுமார் யாதவ், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

உத்தேச அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. சூர்யகுமார் யாதவ் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. சூர்ய குமார் பேட்டிங் செய்யும்போது சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் பந்து வீசினார். அர்ஜுன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் விளாசினார்.

அதோடு மட்டுமல்லாமல் 10 பவுண்டரி, 9 சிக்சடன் 47 பந்தில் 120 ரன்கள் விளாசினார். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker