TAMIL
கோஹ்லி தான் இலக்கு: சீறும் ட்ரெண்ட் போல்ட்

இந்தியா உடனான டெஸ்ட் போட்டியில் கோஹ்லியை வெளியேற்றி தன்னுடைய திறனை சோதிப்பேன் என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் போட்டியை நியூசிலாந்தும் முழுமையாக வென்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 21 ஆம் திகதி தொடங்குகிறது.
காயம் காரணமாக நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் போல்ட் டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடவில்லை.
ஆனால் இப்போது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இது குறித்து பேசிய போல்ட்,
தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் விராட் கோஹ்லி போன்ற துடுப்பாட்ட வீரரை இத்தொடரில் திணறடித்து எனது திறனை நானே சோதித்துக் கொள்வேன்.
ஆனால் கோஹ்லி ஒரு மிகச்சிறந்த வீரர். எல்லோருக்கும் தெரியும் அவர் எத்தகைய வீரரென்று என்றார்.