TAMIL
கோஹ்லி தயவு செய்து இதை நிறுத்த வேண்டும்! இந்தியா தோற்றுவிடுகிறது: கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, முக்கியமான போட்டிகளின் போது வாழ்த்து தெரிவிப்பதை நிறுத்துமாறு இணையத்தில் வைக்கப்பட்ட மனுவில், சுமார் 600-க்கும் மேற்பட்டோர் அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.
இதனால் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் கனவும் தகர்ந்தது.
இந்நிலையில் change.org என்ற இணையத்தில் Abhinay Thakur என்பவர் கோஹ்லி மற்றும் சேவாக் இருவரும், ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களில் குறிப்பாக அரையிறுதி மற்றும் இறுதியாட்டத்தின் போது வாழ்த்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும், அப்படி அவர்கள் அது குறித்து பதிவிட்டால் அது சமூகவலைத்தள பக்கம் அதை நிராகரிக்க வேண்டும் என்று கூறி, ஒரு மனு போன்று ஆரம்பித்தார்.
இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தற்போது வரை 758 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் குறிக்கோள் 1000 பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது தான், தற்போது அது நெருங்கியுள்ளதால், கோஹ்லி மற்றும் சேவாக் வாழ்த்துக்கள் தெரிவிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.
ஏனெனில் அவர்கள் அப்படி குறிப்பிட்ட போட்டிகளின் வாழ்த்து தெரிவிக்கும் போது, இந்தியா தோல்வியடைந்துவிடுவதால், இது போன்ற மனுவை அந்த ரசிகர் அமைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.