இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரது தலைமையில் தான் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்று சாதித்தது.
கொல்கத்தா அணிக்கும் அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இதனை கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் மறுத்துள்ளார்.
மெக்கல்லம் கூறுகையில், ‘நிச்சயம் தினேஷ் கார்த்திக் தான் எங்கள் கேப்டன். அதில் மாற்றம் இல்லை. தற்போது சிறந்த கேப்டன்களில் ஒருவராக மோர்கன் விளங்குகிறார்.
தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப்புக்கு உதவுவதில் மிக பொருத்தமானவராக மோர்கன் இருப்பார். அத்துடன் பேட்டிங்கில் 4-வது வரிசையையும் நிரப்புவார்’ என்றார்.