TAMIL
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ரோகித் சர்மா வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இதனை பார்க்க வேதனையாக உள்ளது.
நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இந்த விஷயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
நாம் சற்று புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.
நமது சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி ஏதாவது தெரிந்தால் அது குறித்து அருகில் உள்ள மருத்துவ துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பணிகள் பாராட்டுக்குரியதாகும்.
இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லோரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.