TAMIL

கொரோனா அச்சுறுத்தல்: வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்த ஆட்கொல்லி நோய் விளையாட்டு உலகத்தையும் விட்டு வைக்கவில்லை.

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், தேசிய அளவிலான பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் வருகின்றன.



அடுத்த சில வாரங்களுக்கு விளையாட்டு போட்டிகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ரத்து மற்றும் தள்ளிவைக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் குறித்த விவரம் வருமாறு:-

* வங்காளதேச கிரிக்கெட் அணி வருகிற 29-ந் தேதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தது.

ஒருநாள் போட்டி கராச்சியில் ஏப்ரல் 1-ந் தேதியும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் அங்கமான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்

போட்டி கராச்சியில் ஏப்ரல் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும் நடைபெற இருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த இரண்டு போட்டிகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்துவது குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும்

ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் (பிப்ரவரி) ராவல்பிண்டியில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி

இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது நினைவுகூரத்தக்கது.



மேலும் வருகிற 24-ந் தேதி தொடங்க இருந்த பாகிஸ்தான் கோப்பைக் கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் தள்ளி போடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியில் எஞ்சிய அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி ரசிகர்கள் அனுமதி இன்றி நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் கிறிஸ் லின், டேவிட் வைஸ், இலங்கை வீரர் பிரசன்னா ஆகியோர் கொரோனா அச்சம் காரணமாக தங்கள் நாட்டுக்கு திரும்பி விட்டனர்.

* சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் உலகளாவிய தடகள அமைப்பின் ஒருங்கிணைப்பு

குழுவினருடன் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து இன்றும், நாளையும் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

* உகாண்டாவில் உள்ள கம்பலாவில் மாலி, ஜாம்பியா, உகாண்டா ஆகிய 3 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி இன்று முதல் 21-ந்

தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போட்டி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ராஞ்சியில் ஏப்ரல் 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெற இருந்த 10-வது தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி டிவிசன்) ஏப்ரல் 29-ந் தேதி முதல் மே 9-ந் தேதி வரையும், சென்னையில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்க



இருந்த 10-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (பி டிவிசன்) மே 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், அரியானாவில் ஏப்ரல் 13-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற இருந்த 10-வது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் ஆக்கி

சாம்பியன்ஷிப் போட்டி (பி டிவிசன்) மே 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், சென்னையில் ஏப்ரல் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி

வரை நடக்க இருந்த 10-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (ஏ டிவிசன்) மே 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும்,

ராஞ்சியில் ஏப்ரல் 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்க இருந்த 10-வது தேசிய ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி

(ஏ டிவிசன்) மே 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், அரியானாவில் ஏப்ரல் 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை நடைபெற இருந்த

10-வது தேசிய சப்-ஜூனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (ஏ டிவிசன்) மே 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும்,

மணிப்பூரில் ஏப்ரல் 26-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை நடக்க இருந்த 10-வது தேசிய சப்-ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப்

போட்டி (பி டிவிசன்) மே 28-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரையும், மணிப்பூரில் மே 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்க இருந்த

10-வது தேசிய சப்-ஜூனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி (ஏ டிவிசன்) ஜூன் 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வீரர்கள் நலனை கருத்தில் கொண்டு தேசிய ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் ஆக்கி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது’ என்று



ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது தெரிவித்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker