TAMIL

கொரோனா அச்சுறுத்தல்: இரானி கோப்பை கிரிக்கெட், பார்முலா1 கார்பந்தயம் ரத்து

உலகையே நடுங்க வைத்து இருக்கும் கொரோனா வைரஸ், விளையாட்டு உலகையும் ஸ்தம்பிக்க செய்துவிட்டது.

இந்த வைரஸ் அச்சுறுத்தலால் பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகளின் தேதி மாற்றம் செய்யப்பட்டும், ரத்தாகியும் வருகின்றன.



கிட்டத்தட்ட அடுத்த 3-4 வாரங்களுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகிவிட்டது.

நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்ட சில முக்கிய போட்டிகளின் விவரம் வருமாறு:-

* மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் சில மாநில அரசுகளின் அறிவுரையை ஏற்று இந்தியாவில் நடந்து வரும் ஐ-லீக் கால்பந்து தொடரின் அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.

* இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரெஸ்ட் ஆப் இந்தியா- ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணிகள் மோத இருந்தன.

கொரோனா பீதி காரணமாக அந்த போட்டி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளான ‘விஸ்ஸி கோப்பை, சீனியர் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் நாக் அவுட்’, சீனியர் பெண்கள் ஒரு நாள் சேலஞ்சர்’, ஜூனியர் பெண்கள் தொடர், 19 வயதுக்குட்பட்டோர் ஒரு நாள் நாக்-அவுட், ஜூனியர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், ஜூனியர் 20 ஓவர் சேலஞ்சர்ஸ் கோப்பை, 23 வயதுக்குட்பட்டோர் நாக் அவுட் மற்றும் ஒரு நாள் போட்டி சேலஞ்சர்ஸ் ஆகிய போட்டிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



*டெல்லியில் வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்க இருந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிவரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 12-ந் தேதி வரை அனைத்து சர்வதேச பேட்மிண்டன் தொடர்களும் ஒத்திவைக்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஓபன், மலேசிய ஓபன், சுவிஸ் ஓபன் ஆகிய போட்டிகளும் அடங்கும்.

* கொரோனா மிரட்டலால் இனிவரும் டென்னிஸ் போட்டித் தொடர்களை 6 வார காலத்துக்குபின் நடத்த சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

* இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இதன் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி பந்தயம் மெல்போர்ன் நகரில் இன்று நடக்க இருந்த நிலையில், அந்த போட்டி ரத்தாகியுள்ளது.



இதே போல் பக்ரைன், வியட்னாம் பந்தயங்களும் தள்ளிவைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 பந்தயம் மே மாதம் இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* புகழ்பெற்ற லண்டன் மாரத்தான் பந்தயம் அடுத்த மாதம் 26-ந் தேதி நடக்க இருந்த நிலையில், அது அக்டோபர் 4-ந் தேதிக்கு நகர்ந்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker