TAMIL

கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கிய கோலி-அனுஷ்கா தம்பதி

‘கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் பிரதமர் மற்றும் மராட்டிய முதல்-மந்திரி ஆகியோரது



பொது நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட தொகையை தானும், அனுஷ்காவும் வழங்கியுள்ளதாக கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூக வலைதளங்களில்

விமர்சிக்கப்படுவதால் தாங்கள் எவ்வளவு தொகை வழங்கினோம் என்ற விவரத்தை கோலி வெளியிடவில்லை.

இதேபோல் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மாநிலங்களவை எம்.பி.க்கான தனது ஒரு மாத சம்பளத்தை (ரூ.1 லட்சம்) வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் தன் பங்குக்கு ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளார்.



அதேபோல் பெங்கால் கிரிக்கெட் சங்கம் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை தருவதாக தெரிவித்துள்ளது.

இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) ஊழியர்கள் தங்கள் 3 நாள் சம்பளமான ரூ.76 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker