TAMIL
கொரோனாவால் மருத்துவமனைகளாக மாறும் ஓட்டல்கள்! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ செய்தியின் உண்மை
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரொனால்டோ, தனது ஓட்டல்களை கொரோனா வைரஸ் மருத்துவமனைகளாக மாற்றவுள்ளதாக வெளியான செய்தியின் உண்மை தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
குறிப்பாக இத்தாலியில் இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், இத்தாலி நாட்டின் முதன்மை கால்பந்து தொடரான செரி ஏ அணியில் விளையாடும் அணிகளில் ஒன்று யுவென்டஸ். இந்த அணியில் உள்ள ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது.
இதனால் அந்த அணியில் உள்ள 121 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனால் அவர் சொந்த ஊரான மடேய்ராவில் ரொனால்டோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் ரொனால்டோவுக்கு சொந்தமான ஓட்டல்கள்(Pestana CR7 Funchal), அடுத்த வாரம் முதல் மருத்துவமனைகளாக(கொரோனா வைரஸ் பரவல் காரணமாக) மாற்றப்படும், இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் இங்கு வந்து
சிகிச்சை பெற்று கொள்ளலாம், அந்த மருத்துவ ஊழியர்களுக்கு ரொனால்டோவே ஊதியம் கொடுத்துவிடுவார் என்று செய்தி வெளியானது.
போர்ச்சுக்கல் நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அந்நாட்டில் 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 உயிரிழந்துள்ளார்.
இதனால் இந்த செய்தி உண்மை என்று சமூகவலைத்தளங்களில் பரவியதால், அனைவரும் ரொனால்டோவை தூக்கி வைத்து கொண்டாடினர்.
அதுமட்டுமின்றி பல்வேறு மொழி ஊடகங்களில் இது செய்தியாகவும் வெளியானது.
இதையடுத்து இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர், இது ஹோட்டல் தான், நாங்கள் மருத்துவமனையாக மாற்றவில்லை. இனிமேலும் ஹோட்டலாகவே இருக்கும்.
பத்திரிகைகளில் இருந்து போன் வந்த வண்ணமே உள்ளன. சிறந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று கூகுளில் Cristiano Ronaldo போன்று செய்தியை கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் திகதி முதல் மார்ச் 17-ஆம் திகதி வரை பார்த்தால், அது போன்று அவர் தானாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது தெளிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.