TAMIL
கையில் இருந்த வெற்றியை இந்தியாவுக்கு கொடுத்துவிட்டோமே…. நியூசிலாந்து கேப்டன் வேதனை
இந்திய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் அணியின் வெற்றி எங்கள் கையில் இருந்தது, அதை அப்படியே நாங்கள் இந்தியாவிற்கு கொடுத்துவிட்டோம் என்று நியூசிலாந்து அணியின் தலைவர் டிம் சவுத்தி வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
பரப்பான இப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.
மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டி, இரண்டுமே நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருந்தது.
ஆனால் கடைசி கட்டத்தில் சொதப்பியதால், இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் நான்காவது டி20 போட்டியில் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடததால், அதற்கு பதிலாக கேப்டனாக இருந்த டிம் சவுத்தி போட்டி முடிவு குறித்து கூறுகையில், இது மிகவும் கடினமான நாள், எங்கள் கைகளில் இருந்த ஆட்டத்தை முழுமையாக இந்தியாவிடம் கொடுத்துவிட்டது, கஷ்டமாக இருந்தது.
ஆனால், கிடைத்த அந்த வாய்ப்பினை இந்தியா இருகைகளையும் நீட்டி பற்றிக்கொண்டது.
இளம் பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக இருப்பதால் சூப்பர் ஓவரில் முடிவு எடுப்பது சற்று சிரமமாக இருக்கிறது.
அதிலும், இந்தியா போன்ற அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வீசும்போது அந்த மனநிலை நம்மை கடினமாக்கி சிறப்பான செயல்பாட்டை வழங்க முடியாமல் போகிறது என்று கூறியுள்ளது.