CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பாயின்ட் டேபிளில் முதல் இடம் பிடிப்பது யார்? என்பதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போது இந்த இரண்டு அணிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் போட்டியிடுகிறது. மூன்று அணிகளும் முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது.
முதல் 10 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே-ஆஃப்ஸ் சுற்றை நெருங்கிவிட்டது. எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விடலாம்.
நேற்று முன்தினம் டெல்லி அணி தனது 11-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள டெல்லியை துவம்சம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதனால் ஆறு வெற்றிகளுடன் கொல்கத்தாவும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு சண்டையிடுகிறது.
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தது.
2-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 195 ரன்கள் எடுத்தது. இதனால் எளிதாக வெற்றி பெறும் என நினைக்கையில் பென் ஸ்டோக்ஸ் அதரடியாக விளையாடி சதம் அடிக்க மும்பை தோல்வியை சந்தித்துள்ளது.
ஆர்சிபி கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றது. ஆனால் மும்பை, டெல்லி கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 6-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11-ல் 4-ல் வெற்றி பெற்று 7-வது இடத்திலும், சென்னை 12-ல் நான்கில் வெற்றி பெற்று கடைசி இடத்திலும் உள்ளது.