CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
கே. கௌதமை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே: ஷாரூக் கான் ரூ. 5.25 கோடிக்கு எடுக்கப்பட்டார்
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அடிப்படை விலை ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுக்க விரும்பியது. ஆனால் மற்ற அணிகளும் ஆர்வம் காட்டியதால், குறிப்பாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விலையை கூட்டிக் கொண்டே சென்றது.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9.25 கோடி ரூபாய் கொடுத்து கிருஷ்ணப்பா கவுதமை ஏலம் எடுத்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக் கானை ஏலம் எடுக்க டெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவியது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 5.25 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தின் அடிப்படை விலை 40 லட்சம் ரூபாய். பஞ்சாப் அணி அவரை வாங்க விரும்பியது. டெல்லி அணி குறுக்கிட்டு அவருக்கான விலையை அதிகமாக உயர்த்தியது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 8 கோடி ரூபாய் கொடுத்து அவரை ஏலம் எடுத்தது. இது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்படுகிறது.