TAMIL
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: இந்தியா வெட்கப்பட வேண்டும்… இந்தியா முடிந்தது -ஜாவித் மியாண்டட்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான ஜாவித் மியாண்டட், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுமாறு மற்ற நாடுகளை வலியுறுத்தியுள்ளார், ஆனால் இந்தியா மீது கடுமையான தாக்குதல் தொடுத்து உள்ளார்.
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து நாடுகளையும் நிறுத்துங்கள் என ஐசிசியிடம் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் விளையாட்டு வலைத்தளமான PacPassion.net இல் வெளியிடப்பட்ட வீடியோவில் ஜாவித் மியாண்டட் கூறி இருப்பதாவது;-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எனது செய்தி, தயவுசெய்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து நாடுகளையும் நிறுத்துங்கள்.
இப்போது நாங்கள் ஐ.சி.சி-யிடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம்.
அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்கள் உலகிற்கு என்ன சொல்லப் போகிறார்கள்.
ஐ.சி.சி-யையும் இந்தியா மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதை நிறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவில் இனவாதம் நடந்து வருகிறது, நாங்கள் விளையாட்டு வீரர்கள் நாங்களும் இந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்.
உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது, எல்லோரும் கவலைப்படுகிறார்கள், ஐ.நா அதைப் பற்றி பேசுகிறது.
எல்லா நாடுகளும் மனிதனுக்காக நின்று இந்தியாவை கண்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், இந்தியா வெட்கப்பட வேண்டும். இந்தியா இனி முடிந்தது.
ஐசிசி, முன்வந்து உலகம் முழுவதும் சொல்லுங்கள், ஐ.சி.சி உடன் உறுப்பினர்களாக உள்ள அனைத்து மக்களும், இனி பாதுகாப்பான நாடு இல்லை என்பதால் இந்தியாவில் எந்த விளையாட்டுகளையும் விளையாடுவதை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் சொல்ல வேண்டும்.
மற்ற நாடுகள் இந்தியாவை விட சிறந்தவை.
இவ்வாறு அந்த வீடியோவில் ஜாவித் மியாண்டட் கூறியுள்ளார்.