TAMIL

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த மகள், நழுவும் சவுரவ் கங்குலி

குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராகவும், ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், ரஜினிகாந்த், சச்சின், சவுரவ் கங்குலி, ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்கள் இந்த விவகாரங்களில் இதுவரையில் எந்த கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை.

இந்தநிலையில், பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் மகள் சனா இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.



அதில் “இந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இல்லாததன் காரணமாக நாமெல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்“ என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் குறிப்பை பதிவு செய்திருந்தார்.

கங்குலி மகளின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், தயவுசெய்து இந்த எல்லா பிரச்சினைகளிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும்.

இந்த பதிவு உண்மையல்ல. அரசியலில் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வயது அவருக்கு இல்லை“ என்று பதிவிட்டார்.



குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கங்குலியின் இந்த பதிவு அவர்களுக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சனாவின் தைரியத்தை பாராட்டியும் உங்களின் அரசியலுக்காக அவரின் பதிவை கொச்சப்படுத்த வேண்டாம் என்றும் கங்குலியை விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker