CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் – 2ம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 66/2
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசார் அலி 93 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஃபாஹிம் அஷ்ரப் 48 ரன்னும், கோஹர் 34 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டாம் பிளெண்டல் களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் எடுத்தது. பிளெண்டல் 16 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து டாம் லாதமும் 33 ரன்னில் வெளியேறினார்.
உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.