TAMIL
கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி சிங், மதன் லால் நியமனம் – பிசிசிஐ
கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி சிங், மதன் லால் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு: ஜனவரி 31, 2020 19:07 PM
புதுடெல்லி
கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ருத்ர பிரதாப் சிங், மதன் லால் மற்றும் சுல்க்ஷனா நாயக் ஆகியோரை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது. விரைவில் பணிக்காலம் முடிய உள்ள தேர்வுக்குழுவினர்களான எம்.எஸ்.கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோருக்கு பதிலாக புதிய தேர்வுக்குழுவினரை, தேர்வு செய்வதே கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் முதன்மை பணியாகும்.
கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு காலம் என்று என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இரட்டை ஆதாய பிரச்சினையில் கடந்த ஆண்டு கபில் தேவ் மற்றும் அன்ஷூமன் கேக்வாட் மற்றும் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் பதவி விலகியதையடுத்து, கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர்.