TAMIL
கால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை
கிழக்கு பிரான்சின் உள்ளூர் கால்பந்தாட்ட லீக் தொடரில் டெர்வில் மற்றும் சோட்ரிச் அணிகள் மோதின.
போட்டியின் போது இரு அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்தது பிறகு கைகலப்பில் போய் முடிய, இந்த சண்டையில் தலையிட்ட மூன்றாவது வீரர் ஒருவர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சோட்ரிச் சமாதானம் செய்ய வந்த வீரரின் உறுப்பை பலமாக கடித்துள்ளார்.
இதனால் வலியில் துடித்த அந்த வீரரை சக வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு காயம்பட்ட இடத்தில் 10க்கும் மேற்ப்பட்ட தையல் போடப்பட்டுள்ளது .
இந்த விவகாரத்தை கையில் எடுத்த உள்ளூர் கால்பந்தாட்ட சங்கம் கடித்த வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவருக்கு ஐந்தாண்டுகள் தடைவிதித்துள்ளது. காயப்பட்ட வீரருக்கும் 6 மாத காலம் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முடிவில் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்துள்ளது.