TAMIL
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் 4-வது 20 போட்டியில் விளையாட வில்லை.
அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், 5-வது டிபோட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார்.
இந்த நிலையில், காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரோகித் சர்மா எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.