CRICKETLATEST UPDATESNEWSTAMIL
காயம் அடைந்த ஜடேஜா கடைசி டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், ஜடேஜா ஆகியோர் காயம் அடைந்தனர்.
கம்மின்ஸ் வீசிய பந்தில் ரிஷப்பண்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவரால் நீண்ட நேரம் விளையாட முடியாமல் உடனடியாக ஆட்டம் இழந்தார்.
மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றதால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் விருத்திமான் சகா விக்கெட் கீப்பிங் பணியை செய்தார்.
ஸ்டார்க் பந்தில் ஜடேஜாவின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜடேஜா ஆடமாட்டார் என்று தெரிகிறது. தேவைப்பட்டால் மட்டுமே அவர் சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் பேட்டிங்க் செய்ய களத்துக்கு வருவார்.
ரிஷப்பண்டுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. இதனால் அவரால் பேட்டிங் செய்ய முடியும்.
ஜடேஜா இல்லாமல் இந்திய அணி சிட்னி டெஸ்டில் விளையாடுவது பெரிய இழப்பாகும். அவர் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். 2-வது இன்னிங்சில் அவர் பந்து வீசாததால், ஆஸ்திரேலியா ரன்களை குவித்தது. வீரர்களின் காயம் சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
கடைசி டெஸ்டிலும் ஜடேஜா ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.