CRICKETLATEST UPDATESNEWSTAMIL

காயத்தில் இருந்து குணமாகவில்லை: முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆடவில்லை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் உலகின் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர். தொடக்க வீரரான அவர் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருப்பார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் வார்னர் சிறப்பாக ஆடினார். முதல் ஆட்டத்தில் 69 ரன்னும், 2-வது போட்டியில் 83 ரன்னும் எடுத்தார்.

2-வது போட்டியில் பீல்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தசை பிடிப்பால் அவதிப்பட்ட அவர் உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதனால் 3-வது போட்டியில் ஆடவில்லை. இதேபோல 20 ஓவர் தொடரிலும் அவர் காயத்தால் விலகியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்டில் (பகல்-இரவு) வார்னர் ஆடவில்லை. இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

காயத்தில் இருந்து குணமடையததால் அவர் ஆடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பே.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய ஏ அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த அணியில் தொடக்கவீரர் ஜோபர்ன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker