CRICKETLATEST UPDATESNEWSTAMIL
காயத்தால் உமேஷ் யாதவ் நாடு திரும்புகிறார் – ஷர்துல் தாகூர், நடராஜன் அணியில் சேர்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். அவர் நாடு திரும்புகிறார்.
இதையடுத்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர், தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உமேஷ் யாதவுக்கு பதிலாக ஷர்துல் தாகூரை 3-வது டெஸ்டில் விளையாட இந்திய அணி நிர்வாகம் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.