TAMIL
காதலியின் குடும்பத்தினருடன் முதன் முதலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்ட்யா… வெளியான புகைப்படம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா காதலியின் குடும்பத்தினரை ஹோட்டல் ஒன்றில் சந்தித்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின், அந்தளவிற்கு எந்த ஒரு தொடரிலும் விளையாடாத ஹார்திக் பாண்ட்யா, திடீரென்று நடிகையான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை காதலிப்பதாகவும், அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறி அவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது ஹார்திக் பாண்ட்யா காதலியின் குடும்பத்தினரை மும்பையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார்.
நிச்சயார்த்தத்தை ஹார்திக் பாண்ட்யா சர்பிரைசாக செய்துவிட்டதால், அவரின் கல்யாணம் பிரம்மாணமாக இருக்குமா? அல்லது இதுவும் ஒரு சர்பிரைசாகவே இருக்குமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.