TAMIL

கவுண்டி கிரிக்கெட்: அஸ்வின் அசத்தல்; விஜய் சொதப்பல்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார்.



ஆனால் இந்த போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அஸ்வின் 4 கவுண்டி ஆட்டத்தில் ஆடி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் சோமர்செட் அணிக்காக களம் இறங்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் யார்க்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டம் இழந்ததோடு, 2-வது இன்னிங்சில் ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker