COVID - 19

கம்பஹா, நீர்கொழும்பின் பல பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்

<p>உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தகவலை சற்று முன்னர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.</p><p>அதற்கமைய, கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மினுவாங்கொட தொழிற்சாலையில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker