TAMIL

கடைசி பந்து வரை விறுவிறுப்பு..! இங்கிலாந்தை திணறடித்த நிகிடி.. திரில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப்பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.

178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது.

கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி வீசினார். முதல் பந்தில் சாம் கரண் 2 ஓட்டங்கள் எடுத்தார். 2வது பந்தில் அவர் அவுட் ஆனார்.

3வது பந்தில் மொய்ன் அலி ஓட்டங்கள் எடுக்கவில்லை. 4-வது பந்தில் அலி 2 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் கடைசி 2 பந்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மொய்ன் அலி போல்டானார். கடைசி பந்தில் ஆதில் ரஷீத் 1 ஓட்டம் எடுத்து ரன் அவுட் ஆனார்.


இதனால் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பரிக்க திரில் வெற்றிப்பெற்றது.

கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய நிகிடிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலைப் பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker