CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: வார்னருக்கு இடம்
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் சமநிலைப் பெற்றுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்தரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை. தற்போது காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதால் கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டிம் பெய்ன் (கேப்டன்), 2. சீன் அப்போட், 3. பேட் கம்மின்ஸ், 4. கேமரூன் கிரீன், 5. மார்கஸ் ஹாரிஸ், 6. ஜோஷ் ஹசில்வுட், 7. டிராவிட் ஹெட், 8. மோசஸ் ஹென்ரிக்ஸ், 9. மார்னஸ் லாபஸ்சேன், 10. நாதன் லயன், 11. மைக்கேல் நேசர், 12. ஜேம்ஸ் பேட்டின்சன், 13. வில் புகோவ்ஸ்கி, 14. ஸ்டீவ் ஸ்மித், 15. மிட்செல் ஸ்டார்க், 16. மிட்செல் ஸ்வெப்சன், 17. மேத்யூ வடே, 18. டேவிட் வார்னர்.