TAMIL
கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் G.C.E. O/L தேர்வில் சாதனை..இலங்கை ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் முல்லைத்தீவு மாணவிகள்..!
2009 இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் G.C.E. O/L தேர்வில் சிறந்த மதிப்பெண்களை எடுத்து சாதித்துள்ளனர்.
முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகளான பவதாரணி மற்றும் விதுர்சிகா ஆகியோரே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் 2 தனித்தனியான சம்பவங்களில் காயமடைந்த அவர்கள் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் சிறந்த மதிப்பெண் எடுத்துள்ளனர்.
வதாரணி மற்றும் விதுர்சிகா G.C.E. O/L தேர்வி முறையே 8 As, B மற்றும் 6 As, 2B களைப் பெற்றுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களின் பாராட்டுகளை பெற்ற மாணவிகள் இருவரும், இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
இருவரும், தன்னுடைய ட்விடடர் தளத்தில் இரு மாணவிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Amazing… well done 👍👏👏👏 https://t.co/URxk9C5pKV
— Mahela Jayawardena (@MahelaJay) April 28, 2020
Courage and determination. Proud Sri Lankan’s we are all proud of. Well done. https://t.co/W0FNb8V2AS
— Kumar Sangakkara (@KumarSanga2) April 29, 2020