TAMIL
கங்குலியின் மாஸ்டர் பிளான்… புகழ்ந்து தள்ளிய அவுஸ்திரேலியா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
இந்திய கிரிக்கெட் கவுன்சில் போர்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி மாற்று சிந்தனை கொண்டவர் என்று அவுஸ்திரேலிய நிர்வாகம் பாராட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கவுன்சில் போர்டின் புதிய தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டார், இவர் நியமிக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளே இந்தியா மண்ணில், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தி காட்டினார்.
அதுமட்டுமின்றி வீரர்களின் உடற்தகுதி நியாயமான முறையில் நடக்கும், அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த வீரர் அணியில் இடம் பிடிக்கமாட்டார் என்று அதிரடியாக கூறினார்.
இப்படி கங்குகுலி செய்து வரும் செயல்கள் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதிய முயற்சியாக அவர் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் என்ற கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறார்.
இது தொடர்பாக உரிய நாடுகளிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து அவுஸ்திரேலியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ், புதிய தலைவராக பதவியேற்ற குறுகிய காலத்தில், இந்திய மண்ணில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக கங்குலி நடத்தி காட்டியுள்ளர்.
தற்போது நான்கு நாடுகளுக்கு இடையிலான சூப்பர் சீரிஸ் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளார். இது, இவரது புதுமையான சிந்தனைக்கு சிறந்த உதாரணம். மாறுபட்ட சிந்தனை கொண்டவர் என்று பாராட்டியுள்ளார்.