ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை டெல்லி அணி வீழ்த்தியது.
முன்னதாக, பஞ்சாப் அணி வெற்றி இலக்கை துரத்தி விளையாடிக்கொண்டிருந்த போது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள்.
ஆனால் ரன்களை முழுமையாக ஓடவில்லை எனக்கூறி நடுவர் பஞ்சாப் அணிக்க்கு ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார்ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது.
கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி டெல்லியைத் வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். நடுவரின் இந்த முடிவுக்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியதாவது:ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார். அதேபோல், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவும் நடுவரின் செயலை விமர்சித்துள்ளார்.