TAMIL
ஒரு நாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்

ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளி),
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (829 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.
அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தையும், பேர்ஸ்டோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.