TAMIL

“ஒருவர் இயக்கிய சினிமா போல கிரிக்கெட்” போட்டிகள் நியாயமாக விளையாடப்படுவதில்லை-சூதாட்ட தரகர்

2000 ஆம் ஆண்டில் ஹன்சே குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.

இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார்.அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்தும்படி, இங்கிலாந்து அரசுக்கு 2016ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம், சாவ்லாவை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இங்கிலாந்தால் அவர் நாடு கடத்தப்பட்டார்.

அவரை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வந்தனர்.

அவர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அளித்த உத்தரவாதப்படி திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு, அதன் துணை குற்றப்பத்திரிகையில், சாவ்லா விசாரணையில் ஒத்துழைக்காதது குற்றத்தில் அவர் ஈடுபட்டதை நிரூபிக்கிறது என்றும் கூறியுள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவின் பேரில் சாவ்லா இந்த மாத தொடக்கத்தில் திகார் சிறையிலிருந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களும், சாவ்லாவின் கூட்டாளிகளான கிருஷன் குமார், ராஜேஷ் கல்ரா மற்றும் சுனில் தாரா ஆகியோரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

விசாரணையில் சஞ்சீவ் சாவ்லா பல ஆண்டுகளாக மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.இந்த விஷயத்தில் ஒரு மிகப் பெரிய சிண்டிகேட் / பாதாள உலக மாபியாக்கள் ஈடுபட்டுள்ளதால், மேலும் விவரங்களை வெளியிட முடியாது ஆபத்தான மனிதர்கள் தான் ஏதாவது சொன்னால் அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என கூறினார்.

சஞ்சீவ் சாவ்லா டெல்லி போலீசாருக்கு கொடுத்துள்ள அறிக்கையில்,

எந்த கிரிக்கெட் போட்டியும் நியாயமாக விளையாடப்படவில்லை”மற்றும் மக்கள் பார்க்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் இயக்கப்படுகின்றன.

“மிகப் பெரிய சிண்டிகேட் / பாதாள உலக மாஃபியாக்கள் ஈடுபாடு அதில் உள்ளது. ஏற்கனவே யாரோ இயக்கிய திரைப்படங்கள் போன்றவை கிரிக்கெட் போட்டிகள் என கூறி உள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker