TAMIL
ஒன்பது விரல்களுடன் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக பணியாற்றுவதே சிறந்தது… பார்தீவ் பட்டேல் நெகிழ்ச்சி
இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக 2003-ல் அறிமுகமான பார்தீவ் பட்டேல் ஒன்பது விரல்களுடன் விளையாடியது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
இவர் 2002-ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது அவரது 17-வது வயதில், இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமானார்.
இவரது இடது கையில் சுண்டு விரல் ஒரு விபத்தின்போது கட்டாகியதால் இதனால் ஒன்பது விரல்களுடன்தான் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து பார்தீவ் பட்டேல் கூறுவதாவது,
‘‘எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது இடது கையின் சுண்டு விரல் கதவுக்கு இடையில் மாட்டிக்கொண்டு கட்டாகிவிட்டதால் விக்கெட் கீப்பிங் கையுறைக்குள் கடைசி விரல் சரியாக சேராது இதனால் கையுறையுடன் உடன் டேப் சுற்றி விடுவேன்.
தற்போது அதை நினைக்கும்போது 10 விரல்களும் இருந்திந்தால் என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்பது விரல்களுடன் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக பணியாற்றியதை சிறந்ததாக உணர்கிறேன்’’என்று கூறியுளார்.
தற்போது ஆர்சிபி அணிக்காகவும், ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்காகவும் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.