13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியது.
மொத்தம் 8 அணிகளில் 73 இடங்கள் நிரப்ப வேண்டி உள்ளது. இதில் வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக 29 பேரை தேர்வு செய்யலாம். ஏலப்பட்டியலில் 186 இந்தியர்கள், 146 வெளிநாட்டவர் என்று மொத்தம் 332 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், மொத்தம் 73 வீரர்களுக்கான இடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.
இந்த 73-ல் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியும்.
சென்னை அணியிடம் மற்ற அணிகளை விட மிகவும் குறைவாக 14.60 கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது.
5 வீரர்களை சென்னை அணி எடுக்க முடியும். எனினும், குறைவான தொகை என்பதால், வீரர்கள் தேர்வில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரா்களின் பட்டியலில், மிக இளம் வயது வீரரான நூா் அகமது இடம்பெற்றுள்ளாா்.
ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த இவருக்கு வயது 14. இடதுகை பந்துவீச்சாளரான இவரது அடிப்படை ஏலத் தொகை ரூ.30 லட்சம்.
அந்நாட்டு வீரா்கள் ரஷீத் கான், முகமது நபி போன்று இவரும் ஐ.பி.எல் போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஆட்டத்தில் நூா் அகமது 9 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈா்த்துள்ளாா்.
இதனால், இவர் ஏலத்தில் எடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள பிரியம் கா்க், இளம் வீரா் யஷாஸ்வி ஜெய்ஸ்வால், தமிழகத்தைச் சோ்ந்த ஆா்.சாய் கிஷோா் உள்ளிட்ட இளம் வீரா்கள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனா்.
இவா்களின் அடிப்படை ஏலத் தொகை ரூ.20 லட்சமாகும்.
தமிழகத்தைச் சோ்ந்த மேலும் சில வீரா்களும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனா்.
சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளின் ஷிம்ரன் ஹெட்மயரும் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளாா்.
இவரது அடிப்படை விலை ரூ.50 லட்சமாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், கிறிஸ் லின், மிச்செல் மாா்ஷ், கிலென் மாக்ஸ்வெல் ஆகியோரும் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இலங்கை வீரா் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் ஆகியோரின் அதிகபட்ச அடிப்படை ஏலத் தொகை ரூ.2 கோடியாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.9.6 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி சூரர் கிறிஸ் லின் 12-வது ஐ.பி.எல். தொடரில் 13 ஆட்டங்களில் 405 ரன்கள் சேர்த்து இருந்தார்.
வாணவேடிக்கை காட்டுவதில் கில்லாடி என்றாலும் அவரது ஆட்டம் சீராக இல்லாததால் கொல்கத்தா அணி அவரை கழற்றி விட்டது.
இதனால் கிறிஸ் லின் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் 30 பந்தில் 91 ரன், 33 பந்தில் 89 ரன்கள் என்று ரன்வேட்டை நடத்தி பிரமாதப்படுத்தினார்.
நல்ல பார்மில் இருப்பதால் அவரது விலை எகிறுவதற்கு வாய்ப்புள்ளது.
அணிகளிடம் உள்ள தொகையை பார்க்கும் போது, டெல்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடியும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியிடம் ரூ.35.65 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணியிடம் ரூ.27.90 கோடியும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும் உள்ளது.
கொல்கத்தாவில் பிற்பகல் தொடங்கும் வீரர்கள் ஏலத்தை, ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஹாட் ஸ்டார் மற்றும் ஜியோ டிவி வழியாகவும் நேரலையாக பார்க்கலாம்.