TAMIL
ஐ.பி.எல். வீரர்களுக்கு எச்சரிக்கை
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.
இந்த பாதுகாப்பான சூழலை விட்டு யாராவது விலகினால் அவர்கள் மீது ஐ.பி.எல். நடத்தை விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
8 அணிகளுக்கும் தனித்தனி ஓட்டல், எப்போதும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.