13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
துபாயில் நேற்றிரவு நடந்த 6வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்து வீசுவது என முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
பின்னர் 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் 109 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த லீக் தொடரில் ஐ.பி.எல். விதிகளின் கீழ் குறைவான பந்து வீச்சு விகிதத்துடன் தொடர்புடைய தவறுக்காக பெங்களூரு அணியின் கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என ஐ.பி.எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.