ஐ.பி.எல் 2020 தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு அறிவித்துள்ள நிலையில் ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சர்வசேத கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த தோனி ஐ.பி.எல் தொடரிலும் மறக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளார்.
அதிக சிக்ஸ் அடித்த இந்திய பேட்ஸ்மேன்
ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் தோனி 3-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (326), ஏ.பி.டிவில்லர்ஸ் (212) 2-ம் இடத்தில் உள்ளார். மகேந்திர சிங் தோனி 209 சிக்ஸர்களுடன் 3-வது இடத்திலும், இந்திய வீரர்களில் முதலிடத்திலும் உள்ளார்.
அதிக போட்டிகளில் கேப்டன்
ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவர் மகேந்திர சிங் தோனி. 10 சீசனில் சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கி உள்ளார். புனே அணிக்கு ஒரு சீசனில் கேப்டனாக இருந்துள்ளார். 2017 ஐ.பி.எல் தொடரில் தோனி புனே அணியின் விக்கெட் கீப்பராக மட்டுமிருந்தார். ஐ.பி.எல் தொடரில் தோனி கேப்டனாக 174 போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதிக வெற்றி பெற்ற கேப்டன்
தோனி தலைமையில் சென்னை அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐ.பி.எல் கோப்பையை அதிக முறை வென்ற கேப்டன் தோனி தான். கேப்டன் பொறுப்பில் தோனி 104 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐ.பி.எல் தொடரில் 100 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரே கேப்டன் தோனி தான்.
விக்கெட் கீப்பிங்
ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பராக தோனி 132 பேரை வெளியேற்றி உள்ளார். இதில் 38 ஸ்டெம்பிங் என்பது குறிப்பிடதக்கது.