
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 26வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசரஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.