
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது.
இறுதியாக 16.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியை எளிதில் சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.