ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஹாரி குர்னி தோள்பட்டை காயத்தால் விலகினார்.
அவருக்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அலி கான் கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை 29 வயதான அலி கான் பெறுகிறார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த சி.பி.எல். கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 8 ஆட்டங்களில் ஆடி 8 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடிய அலி கான் பாகிஸ்தானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.