TAMIL
ஐ.பி.எல்.,உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம் – ரவி சாஸ்திரி
கொரோனா பாதிப்பால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளி வைக்கப்படுள்ளது. இந்தநிலையில் இது குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:-
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட லாக் டவுனில் தங்களின் நேரத்தை
செலவழித்து வருகிறார்கள் மேலும் வரவிருக்கும் நாட்களில் கட்டுப்பாடுகள் குறையும் போது உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நான் இப்போது உலக நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். வீட்டிலேயே இருங்கள், உள்நாட்டு கிரிக்கெட் இயல்பு நிலைக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும்.
உலகக்கோப்பை தொடருக்காக 15 அணிகள் ஒரு நாட்டுக்கு செல்வதற்கு பதிலாக ஒரு நாட்டு வீரர்கள் மற்றொரு நாட்டுக்கு சென்று விளையாடுவதே சரியாக இருக்கும்.
ஐபிஎல் தொடருக்கே முக்கியத்துவம் அளிப்போம்.
ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச போட்டிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் ஐபிஎல் தொடரில் இரு மாநிலங்களுக்கு இடையே நடத்தபடுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சுலபமாக இருக்கும்.
ஆனால் உலகக்கோப்பை போன்ற சர்வதேச போட்டிகள் நடத்தப்படுவதால் ஆனைத்து நாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது கஷ்டமாகி விடும்.
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் 3 மாத காலங்களாக எந்த ஒரு போடியிலும் விளையாடவில்லை, இதனால் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப சில காலம் தேவைப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.