TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு அரங்கேறிய 64-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சியை வீழ்த்தியது.
டெஸ்ஹான் பிரவுன், ராகுல் பெகே, சுனில் சேத்ரி கோல் அடித்தனர்.
பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி என்று 25 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஒடிசா அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்திக்கிறது.