TAMIL

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி கோல் மழை

10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்த 72-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை சந்தித்தது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி முதல் பாதியில் 3 கோல்களை திணித்தது.



பிற்பாதியில் கேரள வீரர் ஒக்பீச் ‘ஹாட்ரிக்’ கோல் (48, 65, 76-வது நிமிடம்) அடித்தார்.

பதிலுக்கு சென்னை அணியினரும் கோல் மழை பொழிந்தனர்.

முடிவில் சென்னை அணி 6-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

சென்னை அணியில் ரபெல் கிரிவெல்லாரோ (39 மற்றும் 45-வது நிமிடம்), சாங்தே (59 மற்றும் 80-வது நிமிடம்) வல்ஸ்கிஸ் (45 மற்றும் 90-வது நிமிடம்) ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர்.

நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் வல்ஸ்கிஸ் (12 கோல்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

14-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என்று 21 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.



7-வது தோல்வியை தழுவிய கேரளா பிளாஸ்டர்ஸ் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker