TAMIL

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ்- ஜாம்ஷெட்பூர் எப்.சி. இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.



ஒரு கட்டத்தில் ஜாம்ஷெட்பூர் 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்த நிலையில், 75-வது நிமிடத்தில் தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளிய கேரளா வீரர் மெஸ்சி போலி, 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் இன்னொரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். கேரளாவின் பல ஷாட்டுகளை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பால் தடுத்து நிறுத்தி அசத்தினார்.

கோவாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker