FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL

ஐ.எஸ்.எல். கால்பந்து : கவுகாத்தி அணி 3-வது வெற்றி

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் நேற்று மாலை நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை வீழ்த்தி 8 ஆட்டங்களுக்கு பிறகு முதலாவது வெற்றியை பெற்றது.

கவுகாத்தி அணியில் அஷூதோஷ் மேத்தா (36-வது நிமிடம்), டிஷோன் பிரவுன் (61-வது நிமிடம்) கோல் போட்டனர். ஜாம்ஷெட்பூர் தரப்பில் 89-வது நிமிடத்தில் பீட்டர் ஹர்ட்லி பதில் கோல் திருப்பினார். மொத்தத்தில் 12-வது லீக்கில் ஆடிய கவுகாத்தி அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. ஏ.டி.கே.மோகன் பகான்- எப்.சி. கோவா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker